அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவியுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ள ரொமாண்டிக் புகைப்படம் அமெரிக்க மக்களை கவர்ந்துள்ளது.

வாழ்கைமுறை நாளிதழ் ஒன்று கடந்த அக்டோபர் மாதம் தொடர்பான சம்பவங்களை வெளியிட்டது.

இந்த நாளிதழின் அட்டை படத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் போஸ் கொடுத்துள்ளனர்.

கண்களில் காதல் உணர்வு ஊற்றெடுக்க, தனது மனைவி மிச்செல்லை ரொமாண்டிக்காக பார்க்கும் ஒபாமாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

“கருப்பு காதல்” என்றும் ஒபாமா எப்போதும் காதல் உணர்வு கொண்டவர் எனவும் மக்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பலரோ எதற்காக கருப்பு காதல் என்று சொல்கிறீர்கள், ஒபாமா- மிச்செல் காதல் என கூறுங்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment