காதல்..புனிதமான அன்பு, இந்த காலத்தில் காதலிக்கும் இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

பொதுவாக காதலிக்கும் ஆண்கள் காதலித்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற பெண்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை இருக்கும், அவ்வாறு இருப்பது தவறல்ல.

ஆனால் அவர்களுடன் ஒருசில விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)

இல்லையெனில் உங்கள் உறவுகளில் பலவிதமான சிக்கல்கள் வந்து காதலர்களுக்குள் பிரிவினைகள் வரத் தோன்றும்.

  • காதலியை தவிர மற்றப் பெண்களிடம் மனம் விட்டு பேசவது, அவர்களுடன் நெருக்கமாக பழக விரும்புவது, தங்களின் தனிப்பட்ட விஷயங்களை கூறுவது போன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.
  • உங்களுக்கும், உங்கள் காதலிக்கும் இடையே சண்டைகள் இருந்தால் அதை எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களிடம் சொல்லவே கூடாது.
  • முக்கியமாக உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே நடக்கும் தாம்பத்திய உறவுகளைப் பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.
  • வேறு பெண்களிடம் சென்று நீ யாரயாவது காதலிக்கிறாயா என்று கேட்பதால், பலவித பிரச்சனைகள் உண்டாக காரணமாக உள்ளது. ஏனெனில் இந்த கேள்வி ஒரு ஆண் தன்னுடன் உறவில் இணைய தான் விரும்பி கேட்கிறான் என பல பெண்கள் கருதுகின்றனர்.
  • “நீ இல்லாம எப்படி இருக்கிறது என தெரியவே இல்லை…” என்ற வார்த்தைகளை உங்களின் மனைவியை தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. ஏனெனில் இது உங்கள் மனைவியை விட அந்த பெண்ணுக்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.
  • வேறு பெண்களிடம் அவர்களை பற்றி அறிந்துக் கொள்ள முயற்சி செய்வது போன்ற பேச்சுக்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இது நீங்கள் அவர்களைப் பற்றி அறிந்தக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்ற அர்த்தத்தை உருவாக்கும்.

Comments

comments, Login your facebook to comment