201604161030196587_Sun-may-scorch-Chennai-today_SECVPFஎலும்பு, மனித உடலுக்கு வடிவத்தையும் வலிமையையும் கொடுத்து, நடமாடும் இயக்கத்தைக் கொடுக்கிறது. மூளை, இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உள் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதும் எலும்புகள்தான்.

எலும்புகள், நமது உடல்நலத்துக்குவேண்டிய கல்சியத்தை சேமித்துவைத்து, தேவையானபோது உடலுக்குத் தருகின்றன. என்புமச்சை யில்தான் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் உருவாகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எலும்பின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப் பலருக்கும் நேரமில்லை.

எலும்பு ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவே ‘ஆஸ்டியோபொரோசிஸ் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. ‘எலும்பை நேசியுங்கள், எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ ( Love Your Bones: Protect Your Future) என்ற இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன வாழ்க்கைமுறை… டி.வி., கணினி, டேப்லெட், மொபைல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் வரவு… வீடியோ கேம் தொடங்கி ஆண்ட்ராய்ட் வரை இருந்த இடத்திலேயே விளையாட்டு… அவ்வளவு ஏன், உடற்பயிற்சிக் கூடம்கூட வீட்டுக்குள்…

இப்படி மனிதர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட எண்ணற்ற விஷயங்கள்! விளைவு… நம்மில் பலரும் தேடிப்போய் வாங்கி வந்திருக்கும் சீதனம்… `ஆஸ்டியோபொரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய்!

இந்த நோய் ஏற்பட முக்கியமான காரணங்களில் வெயிலும் ஒன்று என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. பகல் நேரங்களில் மொட்டை மாடிக்குச் செல்வதற்கு நமக்கு நேரமில்லை. நகரக் குழந்தைகளின் நிலையோ இன்னும் மோசம்.

வீட்டின் வாசலுக்கே வந்து ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள், விடுமுறை நாட்களில்கூட மாலை நேர சிறப்பு வகுப்புகள்… பல வீடுகளில் குழந்தைகள் கூண்டுக்கிளிகளைப் போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். வெயிலில் விளையாட அனுமதி இல்லை நேரமும் இல்லை.

`வெயில்ல விளையாடினால் என்ன..? அதனால என்ன பாதிப்பு வந்துடப் போகுது..?’ என்று தோன்றலாம்.

எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதுமை, பொதுவான ஒரு காரணம். அதேபோல, இளம் வயதிலேயே விளையாட்டுகளில் ஈடுபாடு இன்மை, உடற்பயிற்சியின்மை, சூரிய ஒளி உடலில்படாததால் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு போன்றவையும் எலும்பு தன் வலிமையை இழப்பதற்கான காரணங்களே!

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வோர் எலும்பும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். அந்தச் சமயங்களில் எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகும். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும்.

வயதாக ஆக, இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். சிலருக்குப் பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அதோடு எலும்புகளில் கால்சியம் சேர்வது குறைந்து, பலவீனம் அடையும். அதனால், எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படும்.

இதன் காரணமாக, ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய் ஏற்படுகிறது என எச்சரிக்கின்றார்கள் மூட்டு எலும்பு நோய் மருத்துவர்கள்.

இது தவிர, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்து விடுவதால், இவர்களுக்கும் எலும்பு பலவீனம் அடைந்து இந்த நோய் வந்து விடுகிறது.

இது வயது முதிர்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் வரலாம். ஊட்டச்சத்து குறைப்பாடு, தைராய்டு நோய் மற்றும் சர்க்கரைநோய் உள்ள குழந்தைகளையும் இந்த நோய் அதிகம் பாதிக்கும்.

ஆஸ்டியோபொரோசிஸை துல்லியமாகக் கண்டறிய ‘டெக்ஸா ஸ்கேன்’ (Dua X-ray absorptiometry Scan – Dexa Scan) எனும் பரிசோதனை முறை உள்ளது. மேலும் ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மூலமும் கண்டறியலாம். எலும்பு மீளுருவாக்கம் (Bone Turnover) சோதனை மூலமாக இந்த நோய் கண்டறியப்படுகிறது.

இந்த நோய் வரும்முன் அறிகுறிகள் தெரிவதில்லை. எலும்பு முறிவு அல்லது வலி தோன்றும்போது மட்டுமே அறிய முடியும். எனவே, இந்த நோய் `ஆபத்தான, அதேநேரம் அமைதியாகக் கொல்லும் நோய்’ எனப்படுகிறது.

கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகளான பால், தயிர், மோர், பசலைக்கீரை மற்றும் உலர்ந்த பழங்களைச் சாப்பிட வேண்டும். சூரிய ஒளி உடலில்படும் வகையில் நிற்பதன் மூலம், விட்டமின் டி சத்துக்களைப் பெறலாம்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா மற்றும் எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

பள்ளிகளில் மாணவர்களுக்குப் படிப்பில் நாட்டத்தை உருவாக்குவதோடு நின்று விடாமல், அவர்களை விளையாட்டுகளிலும் ஈடுபடுத்த வேண்டும். அவர்களைத் தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

ஆக, உலக எலும்பு அடர்த்திக் குறைவு நோய் தினம் சொல்லும் செய்தி. “எலும்பு ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, வெயிலோடு விளையாடுங்கள்; ஆனால், அது காலை மற்றும் மாலை வெயிலாக இருக்க வேண்டும்”.

பெரியவர்கள் காலை 6-8 மணிக்குள் சூரிய நமஸ்காரம், தோட்ட வேலை என வெயிலில் செய்ய வேண்டிய வேலைகளை செய்யலாம். இதனால், உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்கும். காலையில் வரும் இளம் வெயிலை 2 – 3 நிமிடங்கள் வரை பார்ப்பது நல்லது. வலிமையான எலும்புகளை பெற உடற்பயிற்சி செய்யுங்கள். வெயில் உடல்நலத்துக்கு நல்லது!

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் டி, வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆண்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டுக்குள்ளே முடங்கும் பெண்களுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் இந்த நோய் வரலாம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கல்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும்.

இதை ஈடுகட்டும் அளவுக்கு கல்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், கல்சிய குறைப்பாடும் ஏற்படும். இப்படி கல்சியம் சத்துக் குறைவதற்கான சூழ்நிலைகள், ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருப்பதால், அவர்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆஸ்டியோபோரோசிஸ் தினம்: எலும்பு புரை நோயை தடுக்க ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

தினசரி நம் உடலுக்கு கிட்டத்தட்ட 1 முதல் 1.3 கிராம் வரை கல்சியம் சத்து தேவை. இதைப் பெற, காலை மதிய உணவுக்கிடையே தினமும் 1 கப் மோர் சாப்பிடலாம். மதிய உணவில் வாரம் இரு நாள் ராகி ரொட்டி அல்லது கம்பஞ்சோறு, கூடவே மறக்காமல் கீரை, 1 கப் பீன்ஸ், மாலையில் 1 கப் பழச்சாறு, இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால்… இந்த 1 கிராம் கல்சியம் கிடைத்து விடும்.

பசும்பாலில் கல்சியம் நிரம்ப உள்ளது. பழங்கள், கீரைகள் என்று குறிப்பிட்ட சிலவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் சிறந்த பலனளிக்கும். சைவம், அசைவ உணவுகள் உ லராத சீமை அத்திப்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா, வெந்தயக்கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக்கீரை, காலிஃப்ளவர் கெரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

தானிய வகைகளில், கல்சியத்தில் ராகிதான் டாப். பெரியவர்களுக்கு ராகி தோசையும், சிறுவர்களுக்கு ராகி – பனைவெல்ல உருண்டையும் செய்துகொடுக்கலாம். கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவுக்கு இணையாக கல்சியம் உள்ளவை. அசைவத்தில், நண்டில் கல்சியம் கிடைக்கும். அதேபோல் மீனிலும் கல்சியம் அதிகம்.

ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கான ஜோதிட ரீதியான காரணங்களை அறிந்து கொள்வோம்…..

எலும்புக்கு காரகனாக சூரியனும் என்புமச்சைக்கு காரணமாக செவ்வாய் இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கும் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான்.

மேலும் ஆயுர்வேதத்தில் எலும்புபுரை நோயை வாத நோயாகவே குறிப்பிடுகின்றனர்.என்றாலும் சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. மேலும் சூரியன் மற்றும் செவ்வாயும் சனியுடன் அசுப சேர்க்கை பெறுவதும் கூட எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

எந்த ராசிக்காரர்களை தாக்கும் உடம்பின் கட்டுமானத்திற்கு முக்கியமான எலும்பு சம்மந்தமான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையை கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான சுக்ரன் (ரிஷபம்) , புதன் (கன்னி) மற்றும் சனி (மகரம்) ஆகியவற்றின் தொடர்பு எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

அல்லோபதி மருத்துவத்தில் சுண்ணாம்பு சத்து குறைபாடு எனும் கல்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்கிறது. அந்த விதத்திலும் கல்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கல்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியம் (காரக கிரகம் சூரியன்) இரும்பு சத்து (காரக கிரகம் செவ்வாய்) ஆகியவற்றின் நிலைப்பாடும் இந்த நோயை தெரிவிக்கிறது. மேலும் சர்க்கரை சத்து அதிகமாவதும் கல்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை சத்திற்கான காரக கிரகம் சுக்ரன் ஆகும்.

உடம்பில் விட்டமின் D3 எனப்படும் மெக்னீஷியம் குறைப்பாடு உள்ளவர்களை சூரிய வெளிச்சத்தில் நிற்க சொல்லுவது அனைவரும் அறிந்ததே. சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இனைவு பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு இலக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தப்படுவது. காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது.

எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாத நோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று இலக்கனத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது.

பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இணைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.

1. சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது

2.சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது.

3.சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது.

4.குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7ம் வீட்டில் நிற்பது.

5.சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது.

6. சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது.

7.சூரியன் கடகத்தில் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது.

9.சூரியனும் சுக்ரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது.

10. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது.

இதற்கு பரிகாரம்;

1. சனீஸ்வரபகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணெய் சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

2. சூரியனுக்கும் சனீஸ்வரருக்கும் சிவ வழிபாடே சிறந்ததாகும். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வணங்குவது எலும்பு புரை நோய் வருவதை தடுக்கும். இந்த கோயிலில் திரு ஞான சம்மந்தர் எலும்பிலிருந்து இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

3. மார்கண்டேயனுக்காக திருக்கடையூரில் எமனை வதம் செய்து சாம்பலாக்கி திருச்சி அருகில் உள்ள திருப்பைஞ்சீலி எனும் தலத்தில் அஸ்தியிலிருந்து (எலும்புச்சாம்பல்) எமனை மீண்டும் உயிர்பித்ததால் திருப்பைஞசீலி ஞீலிவன நாதர் திருக்கோயிலும் சிறந்த பரிகாரத்தலமாகும்.

4. பிரம்மனின் கபாலத்தை கையில் ஏந்தி எலும்பு மாலை அணிந்த பைரவ வழிபாடும் சிறந்த பலனளிக்கும்.

5. சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது.

Comments

comments, Login your facebook to comment