ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உள்ள ஒரு மனிதன் எவ்வித நோய் பாதிப்புகளும் இன்றி வாழமுடியும்.

இளம் வயதில் முறையற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றிவிட்டு, வயதான காலத்தில் நோய்கள் நம்மை தாக்கும்போது உடற்பயிற்சிகள், உணவுகட்டுப்பாடு என்று பின்பற்றுவதை விட இளம் வயதில் இருந்தே, ஆரோக்கிய பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

எனவே, நீங்கள் 20 வயதினை நெருங்கிவிட்டீர்கள் என்றால் கீழே கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள்,

உணவில் கவனம்

நீங்கள் கவனமாக பின்பற்ற வேண்டிய வழக்கம். ஜங்க் ஃபுட் எனப்படும் ஆரோக்கியக் குறைவான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடம்பிற்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

அதற்குப் பதிலாக ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள். புதிய காய்கறிகள் மற்ரும் பழங்களை உண்ணத் தொடங்குங்கள். ஆரோக்கியமான ஆகாரம் உங்களது நீண்ட மகிழ்வான வாழ்விற்கு உதவும்.

 

உடற்பயிற்சி

 

நீங்கள் ஜிம்மிற்கு செல்வீர்களோ அல்லது நடைபயிற்சி செய்வீர்களோ, ஆனால் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். 20 முதல் 40 நிமிட நடை அல்லது ஒட்டம் உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை வலுவாக்கும்.

ஒரு ஜிம்மில் சேருவது உங்கள் உடம்பை ஆரோக்கியமாகவும் நல்ல உடற்கட்டையும் தரும். இது உங்களை உடற்பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு தரும்.

யோகா

நீங்கள் யோகாவையும் ஒரு நல்ல உடற்பயிற்சியாக செய்ய வேண்டும். ஏனென்றால், அது உங்கள் உடம்பிற்கு பல்வேறு விதங்களில் உதவும். தினமும் யோகா செய்வது உங்களை அழுத்ததிலிருந்து விடுவித்து உங்கள் சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் ஆக்கும்.

தினமும் யோகா செய்வது பல்வேறு நோய்களை குணமாக்கவும், தலை முடிப் பிரச்சனைகளை சரிசெய்யவும், சருமப் பிரச்சனைகளையும் கூட சரிசெய்ய உதவும்.

டீ மற்றும் காபியை குறைத்திடுங்கள்

எப்போதும் கால்சியம் அதிகமுள்ள பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் எலும்பையும் உடலையும் வலுவாக்கும். டீ மற்றும் காபி போன்றவை அதிக காஃபைன் நிறைந்திருப்பதால் அது சருமத்திற்கு பாதிப்பை தரும்.625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)

Comments

comments, Login your facebook to comment