625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்தை பரப்பும் பொருட்டு பிரபல நீச்சல் வீராங்கனை ஷ்ரத்தா ஷுக்லா 550 கி.மீற்றர் தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்க முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பிரபல நீச்சல் வீராங்கனை ஷ்ரத்தா ஷுக்லா கங்கை நதி தூய்மை திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த சாதனை நீச்சல் நிகழ்வினை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதில் இவர் கான்பூர் முதல் வாரனாசி வரையிலான 550 கிலோ மீற்றர் தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்க திட்டமிட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஷ்ரத்தா இந்த முயற்சியில் இறங்கவிருக்கிறார்.

தினசரி 7 மணி நேரம் நீச்சலிட்டு மொத்தம் 10 நாட்களில் வாரனாசி வந்தடைய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல் நாளில் சுமார் 100 கி.மீற்றர் தூரம் கடக்க திட்டமிட்டுள்ள அவருக்கு குடும்பத்தினரும் உள்ளூர் நிர்வாகமும் உற்சாமும் ஆதரவும் அளித்து வருகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு கான்பூர் முதல் அலகாபாத் வரையிலான 282 கி.மீற்றர் தூரத்தை கடந்தது தான் இவரது சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் இந்த தூய்மை கங்கை திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment