இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் 34,000 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக குற்றவியல் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் பதிவான வழக்குகளில் 34,651 எண்ணிக்கையில் பாலியல் வன்முறை வழக்குகள் என்று தேசிய குற்றவியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் 6 வயது சிறுமி முதல் 60 வயது முதியவர் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 17,000 என கூறப்படுகிறது.

பதிவான 34,651 பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்ட 33,098 பேருக்கு தாக்கப்பட்டவர் குறித்த தகவல் தெரியும் என்பதும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கடந்த ஆண்டில் 4,437 பாலியல் வன்முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நாட்டில் நீலவும் மாறுபட்ட சூழலை ஒப்பிட்டு பார்க்கும்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment