625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)உத்தரபிரதேசத்தில் டீ, சமோசாவுக்காக அமைச்சர்கள் ரூ.8.78 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

உத்தரபிரரேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு தரும் சமோசாக்களுக்கு மட்டும் ரூ.8.78 கோடி செலவு செய்ததாக சட்டசபையில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டசபையில் அவர் தெரிவித்ததாவது, அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு டீ, சமோசா, குலோப்ஜாமூன் வாங்கித் தர, நாளொன்றுக்கு ரூ.2,500 ஒதுக்கப்படுகிறது.

அமைச்சர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் ஒதுக்கப்படும். இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8.78 கோடி (ரூ.8,78,12,474) செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சமூக நலத்துறை அமைச்சர் அருண் குமார் கோரி ரூ.22.93 லட்சம் (ரூ.22,93,800) செலவு செய்துள்ளார்.

இதற்கடுத்தபடியாக முகமது ஆஸம் கான் ரூ.22.86 லட்சமும் (ரூ.22,86,620), கைலாஷ் சவுராசியா ரூ.22.85 லட்சமும் (ரூ.22,85,900) செலவு செய்துள்ளனர். பொதுப்பணித் துறை அமைச்சர் சிவ்பால் யாதவ் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment