625.368.560.350.160.300.053.800.560.160.90 (4)சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்து அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வளையல் வியாபாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் வளையல் வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது பாண்டி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. போதைப்பழக்கம் அதிகம் உள்ளதால், இவரை இவரது குடும்பத்தினர் கைவிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இவர் சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களில் வளையல் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமாரிக்கு வளையல் வியாபாரம் செய்வதற்கு சென்ற இவர், அங்கு 12 வயது சிறுமி ஒருவர் பெற்றோரை விட்டு தனியாக விளையாடுவதை நோட்டமிட்டுள்ளார்.

அதன் பின் அச்சிறுமியிடம் சென்று பெற்றோர் அழைப்பதாக கூறி அச்சிறுமியையும் மற்றும் 8 வயது குழந்தையையும் கடத்தி தன் தோள் மீது போட்டு பழனிக்கு அழைத்து சென்று அவர்களை அங்கு பிச்சை எடுக்க வைத்துள்ளார்.

காலை முதல் மாலை வரை பிச்சை எடுக்கும் சிறுமிகள் அவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பாண்டி பணத்திற்கு முழுவதும் குடித்து விட்டு இரவில் சிறுமிகளை பாலியல் தொந்தரவும் செய்துள்ளார்.

இதனால் செய்வதறியாது அச்சிறுமிகள் பழனி கோவிலின் அடிவாரத்தில் அழுதநிலையில் பிச்சை எடுத்துள்ளனர். சிறுமிகள் அழுவதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளார்.

நடந்தவற்றை எல்லாம் கூறிய சிறுமிகளை ஆட்டோ ஓட்டுநர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

பொலிசார் வளையல் வியாபாரி பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறுமிகள் அவர்களது பெற்றோர்கள் அல்லது காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments

comments, Login your facebook to comment