1472631251-854தூத்துக்குடியில் ஆசிரியை ஒருவரை வாலிபர் ஒருவர் பள்ளி வாசலிலேயே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸினா (24) என்ற ஆசிரியை தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்க வந்துள்ளார். அப்பொழுது பள்ளி வாசலில் ஆசிரியை பிரான்ஸினாவை தடுத்துள்ளார் வாலிபர் கீகன் ஜோஸ் (27).

இருச்சக்கர வாகனத்தில் ஜோஸ் கையில் இருந்த அரிவாளால் ஆசிரியயை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தப்பியோடிய வாலிபர் ஜோஸும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

ஆசிரியை பிரன்ஸினாவை ஜோஸ் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், பிரன்ஸினா ஜோஸை காதலிக்க மறுத்து வேறு நபரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால், பிரன்ஸினாவை கொலை செய்து விட்டு ஜோஸ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

1472631251-854

Comments

comments, Login your facebook to comment