625.368.560.350.160.300.053.800.560.160.90 (3)இந்தியாவின் கிழக்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த ரமணி சவுத்ரி என்பரின் மகன் தேவேஷ் தன் வளர்ப்பு நாயை நேற்று முன்தினம் இரவில் வாக்கிங் கூட்டிச்சென்றுள்ளார்.

அப்போது அவரது வீட்டின் அருகிலிருந்த ப்ரிஜ்லால் என்பவரின் வீட்டு பூந்தொட்டியில் நாய் சிறுநீர் கழித்தது. இதனால் அவரின் மகன் மணிஷ், தேவேஷிடம் தகராறு செய்தார்.

இது இருவரின் வீட்டிலும் சண்டையாக மாறி பிரிஜ்லால் அவரது இரண்டு மகன்களும் தேவேஷையும் அவரது தாய் ரமணியையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மணி்ஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரர் மற்றும் அவரது அப்பாவை பொலிசார் தேடி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment