625.368.560.350.160.300.053.800.560.160.90 (4)கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் அக்காவை நிச்சயம் செய்து விட்டு, தங்கையை கல்யாணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ரெனிபுனூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

அந்த இளைஞர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த பெண்ணை காண்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்ற அவர் அனைவருடனும் சகஜமாக பேசி பழகியுள்ளார். அவ்வாறு குடும்பத்துடன் பேசி பழகிய போது அப்பெண்ணின் தங்கையிடமும் பேசியுள்ளார்.

அதை தொடர்ந்து அடிக்கடி வீட்டிற்கு சென்ற அவர் நிச்சயதார்த்தம் செய்த அக்காவிடம் அதிகம் பேசாமல், தங்கையிடம் அதிகமாக பேசியுள்ளார்.

இது நாளடைவில் இருவருக்கும் காதலாக மலர்ந்துள்ளது. தனது அக்காவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என்றும் தெரிந்தும் கூட அந்த இளைஞரை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த அப்பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்தை அணுகிய போது, பொலிசார் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துள்ள காரணத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யமுடியாது என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அக்காவுக்கு நிச்சயதார்த்தம் செய்த மாப்பிள்ளையை, தங்கை திருமணம் செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Comments

comments, Login your facebook to comment