625.368.560.350.160.300.053.800.560.160.90 (5)டெல்லி மாநிலத்தின் சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சந்தீப் குமார்.

இவர் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது கட்சியின் கொள்கைக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அமைச்சர் சந்தீப்குமார் பெயரில் வெளியான சிடி பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் சபையில் இருந்து சந்தீப்குமாரை நீக்கம் செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதனை அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்தீப் குமார், நான் ஒரு தலித் என்பதாலே இத்தகைய குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சிக்காக எப்போதும் உழைப்பேன் எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதாலேயே பதவி விலகியதாகவும், நான் எந்த தவறான காரியங்களிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment