625.368.560.350.160.300.053.800.560.160.90 (6)உத்தரபிரதேசத்தில் கணவன், மாமனாரின் சந்தேகம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஒருவர் தனது முகத்தை தீயில் கருக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் பில்பட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேகா லோதி. இவருக்கும் நிர்மல் குமாருக்கும் 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

ரேகா மிகவும் அழகாக இருந்ததால் நாளடைவில் நிர்மலுக்கு அதுவே சந்தேகத்தையும், அதனால் கோபத்தையும் உண்டாக்கியது.

ரேகாவின் அழகைப் பற்றிக் கூறி கடுமையான வார்த்தைகளால் திட்ட தொடங்கியதுடன், சந்தேகப்படவும் தொடங்கினார்.

நிர்மலுடன் அவரது தந்தையும் இணைந்து கொண்டார். இதனால் மனமுடைந்த ரேகா, அனைவரது கவனமும் தன் மீது விழாமல் இருக்க, தனது முகத்தை தீயில் கருக்கி கொண்டார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேகா, ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ரேகா முகத்தில் 20 முதல் 25 சதவீத காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முகத்தின் சருமமானது முற்றிலும் எரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மகளை மனரீதியாக துன்புறுத்திய மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் ராம்குமாரி கூறியுள்ளார்.

ரேகா அல்லது ராம்குமாரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த பின்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment