foodball_002.w540வங்காள தேச தலைநகர் டாக்காவை சேர்ந்தவர் முகமது அப்துல்லா (வயது22). 10 வருடங்களுக்கு முன் ஒரு ரெயில் விபத்தில் இவர் தனது 2 கால்களையும் இழந்து விட்டார். தற்போது அங்குள்ள படகு நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

அப்துல்லா தனது 7 வயதில் தயார் இறந்து விட்டார். தந்தை மற்றும் சித்தியின் கொடுமை தாங்காமல் விட்டை வீடு வெளியேறினார். 2001 ஆம் ஆண்டு ரெயில் விபத்தில் கால்களை இழந்தார். மருத்துவமனையில் இருந்து அவரை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்தனர் ஆனால் 18 மாதத்தில் அங்கிருந்து வெளியேறினார்.

கால்களை இழந்தாலும் முகமது அப்துல்லா தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கால்பந்து தான் ஒரு கால்பந்து வீரராக ஆகவேண்டும் என்பது அவரது விருப்பம். கால்களை இழந்த பிறகும் அவரது வேட்கை குறைய வில்லை. கிறிஸ்டினா ரொனால்டாவின் தீவிர ரசிகர் அவர்.

அப்துல்லாவின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அப்ரஜியோ பங்களா கால்பந்து பயிற்சியாளர் அப்துல்லாவுக்கு பயிற்சி அளித்தார்.தற்போது அப்துல்லா வங்காள தேச தேசிய மைதானத்தில் கால்பந்து விளையாடி வருகிறார். அவரது கால்பந்து திறமையை பார்ப்பவர்கள் ஆச்சரியபடுகிறார்கள்.

8 மணி நேரம் சுமைதூக்கும் வேலைபார்க்கும் அப்துல்லா பின்னர் கால்பந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்.அவருக்கு தினமும் வருமானமாக ரூ. 72 கிடைக்கிறது.

இது குறித்து அப்துல்லா கூறியதாவது:-Bஎன்னால் நடக்க முடியவில்லை என்றாலும் எனது மனது முழுவதும் கால்பந்து விளையாட்டுதான் இருந்தது. எனது வாழக்கை இனி சக்கர நாற்காலியில் தான் என எண்ணி பயந்தேன். இழந்த பிறகு முயற்சி செய்வதில் தவறில்லை என அதை முயற்சித்து பார்க்க எண்ணினேன். நான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் முதலில் நான் நடக்க முயற்சி செய்தேன்.

முதலில் நான் யாருடைய உதவியும் இன்றி என்னை நானே பார்த்து கொள்ள நினைத்தேன் முதலில் கடினமாக இருந்தாலும் பின்னர் அதில் நான் வெற்றி அடைந்தேன். இப்போது நான் நடக்கிறேன். வேலை செய்கிறேன் மற்றவர்களுடன் விளையாடுகிறேன்.

முதலில் கைகளால் தான் விளையாடினேன் பின்னர் தான் கால்களால் விளையாட தொடங்கினேன். என கூறி உள்ளார். இவரது வாழ்க்கை நம்பிக்கை இழந்த லட்சகணக்கானவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

Comments

comments, Login your facebook to comment