625.368.560.350.160.300.053.800.560.160.90ஆந்திராவில் கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று ஜோதிடர் கூறியதால், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சேர்ந்து ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கிரிஜா(27) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது, இந்நிலையில் கிரிஜா மீண்டும் கர்ப்பமானார்.

அவர் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை தான் என ஜோதிடர் கணித்துள்ளார், இதனால் கோபமடைந்த கிரிஜாவின் மாமியாரும், நாத்தனாரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

கொலை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், ஆசிட் வாங்கி அவளது வயிற்றில் ஊற்றியுள்ளனர்.

எரிச்சல் தாங்க முடியாமல் கதறிய கிரிஜாவை, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம், 26 ஆம் திகதி தான் பொலிசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.

தகவலறிந்த பொலிசார் உடனடியாக கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து, கிரிஜாவின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் கெமிக்கல் ஆய்வாளர்கள் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

அவர்கள் மண்ணெண்ணையில் கெமிக்கல் கலந்து உள்ளனர் என்று தோன்றுகிறது, இதுதொடர்பாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் கிரிஜாவின் மாமியாரை தேடிவருவதாக தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment