625.368.560.350.160.300.053.800.560.160.90 (3)ஆக்ராவில் சிறுவர்கள் நான்கு பேர் 40 அடி உயர பாலத்திலிருந்து யமுனை ஆற்றில் குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

குறித்து வீடியோவில், 9 முதல் 12 வயதுடைய நான்கு சிறுவர்கள், தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்திருக்கும் 20 அடி உயர இரும்பு கிரில் வேலி மீது ஏறி தங்கள் உயிரை பணயம் வைத்து 40 அடி கீழே ஓடும் யமுளை ஆற்றில் குதிக்கின்றனர்.

எனினும், நான்கு பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என நம்பப்படுகிறது. குதிப்பதை பார்க்கும் பொழுது அவரகள் வழக்கமாக குதித்து பழகியவர்கள் என தெரிகிறது.

ஆனால், இதுவரை சம்பவம் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment