625.368.560.350.160.300.053.800.560.160.90 (4)உத்திரபிரதேசத்தில் பிறந்து 17 நாட்களேயான பச்சிளம் குழந்தையை அவரது அத்தையே மருத்துவமனையின் மாடியிலிருந்து தூக்கி வீசியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் கான்பூர் ஷியாம் மருத்துவமனையில் சரிதா என்ற பெண் தன் நாத்தனாரின் குழந்தையை கவனித்து வந்துள்ளார்.

திடீரென இவர் நேற்று முன்தினம் குழந்தையை காணவில்லை என அலறியுள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மருத்துவமனை ஊழியர்களும் குழந்தையை தேடினர்.

அப்போது பச்சிளம் குழந்தையின் சத்தம் கேட்டது, ஓடிச்சென்று பார்த்த போது குரங்குகள் வராமல் இருக்க போடப்பட்ட கம்பி வலையில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனையடுத்து சிசிடிவி கமெராவை ஆய்வு செய்து பார்த்த போது, குழந்தையுடன் சென்ற சரிதா வெறும் கையுடன் திரும்பி வந்தது பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

தனக்கு மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதால், பொறாமையில் இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார், தற்போது சரிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment