625.0.560.350.160.300.053.800.668.160.90தானேயில் இந்து முதியவரின் இறுதிச்சடங்கை முஸ்லிம் இளைஞர்கள் முன்னெடுத்து நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டத்தில் தனது மனைவியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த வாமன் கடம் என்ற 65 வயது முதியவர் நேற்று காலமானார்.

அவரது மனைவி அடக்கம் செய்ய பொருளாதார வசதியும், ஆள் உதவியுமின்றி கண்ணீரில் தத்தளித்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட மும்ப்ரா பகுதியை சேர்ந்த 8 முஸ்லிம் இளைஞர்கள், தங்களது கைப்பணத்தை செலவிட்டு இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து உதவி உள்ளனர்.

மேலும் பிணத்தை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சுடுகாடு வரை கொண்டு சென்று தகனம் செய்துள்ளனர்.

இதுதொடர்பான தகவல் வெளியானதும் மும்ப்ரா- கால்வா பகுதி எம்.எல்.ஏ.வான ஜித்தேந்திரா அவ்ஹாத் என்பவர் இந்த செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) 625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment