625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)மூன்று ஆண்டுகளுக்கு முன் மும்பை ரயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசிய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆசிட் வீச்சு வழக்கில் பலர் தண்டிக்காமல் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது, இந்தியாவில் முதன் முறையாக ஆசிட் வீச்சு வழக்கிற்கு இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை பலர் வரவேற்றுள்ளனர்.

டெல்லியில் பிபிஎம்பி காலனியில் ப்ரீத்தி ரதியின் அண்டை வீட்டில் வசித்தவர் அன்குர் பன்வார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரியான இவர் வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

இந்நிலையில் ப்ரீத்திக்கு மும்பை ராணுவ மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைத்ததால் பொறாமை அடைந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் ப்ரீத்தி பணியில் சேருவதற்கு தனது பெற்றோருடன் மும்பை வந்தபோது, அதே ரயிலில் அவர்களுக்கு தெரியாமல் பயணம் செய்த அன்குர் தனது முகத்தை மூடியவாறு ப்ரீத்தி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ப்ரீத்தி ஜூன் 1ம் திகதி மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். இக்கொலை வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு மகளிர் நீதிமன்றம் அன்குர் பன்வாரை குற்றவாளி என கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அன்குர் பன்வாருக்கு (26) மரண தண்டனை வழங்கி சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment