625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)நெல்லையில் 5 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி, பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இசக்கியப்பன் (வயது-38. பிரேமா (வயது-32) தம்பதி. இவர்களுக்கு கல்பனா (வயது-12), தருண்மாடசாமி (வயது-5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

பிரேமா, தமது உறவினர் ஆறுமுகம் என்பவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஆறுமுகத்தின் மனைவி கலா அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். கலா பிரிந்துசென்றதற்கு, பிரேமாதான் காரணம் என கருதிய ஆறுமுகம், பிரேமா குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், பிரேமாவின் ஐந்து வயது மகன் தருண்மாடசாமி பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது ஆறுமுகம் சிறுவனை சரமாரியாக வெட்டியுள்ளான்.

இதனை தடுக்க முயன்ற பிரேமாவுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த சிறுவன் தருண் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தருண் உயிரிழந்துள்ளார்.

இந்த பயங்கர சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)

Comments

comments, Login your facebook to comment