yal-murder-640x400பணம் கேட்டு கள்­ளக்­கா­தலி தொடர்ந்து தொந்­த­ரவு செய்­ததால் உல்லாசத்துக்கு அழைத்து அவரை கள்­ளக்­கா­தலன் கழுத்­த­றுத்து கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சம்­பவம் குறித்து பொலிஸார் தெரி­வித்­துள்­ள­தா­வது, தமிழ்­நாடு ஈரோடு மாவட்டம் சத்­தி­ய­மங்­கலம் பகுதி தாள­வாடி அருகே உள்ள அர­ல­வாடி  கிரா­மத்தைச் சேர்ந்­தவர் குரு­சாமி. இவ­ரது மனைவி ஜோதி(வயது 35). இவர்­க­ளுக்கு கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்பு திரு­மணம் நடந்­தது. குழந்­தை­களும் உள்­ளனர்.

இந்த நிலையில் ஜோதிக்கும், அதே கிரா­மத்தைச் சேர்ந்த சந்­தி­ர­சேகர்(26) என்ற இளை­ஞ­ருக்கும் பழக்கம் ஏற்­பட்­டது.

அந்த பழக்கம் நாள­டைவில் கள்­ளக்­கா­த­லாக மாறி­யது. இரு­வரும் அடிக்­கடி தனி­மையில் சந்­தித்து உல்­லாசம் அனு­ப­வித்து வந்­தனர்.

இரு­வரும் அடிக்­கடி செல்­போனில் பேசி அந்­த­ரங்க விஷ­யங்­க­ளையும் பகிர்ந்து கொண்­டனர்.  சந்­திக்கும் போதெல்லாம் கள்­ளக்­கா­த­லிக்கு சந்­தி­ர­சேகர் காதல் கடி­தங்­க­ளையும், பரிசு பொருட்­க­ளையும் கொடுத்­துள்ளார். அவ்­வப்­போது தேவைக்கு பணத்­தையும் கொடுத்து வந்­துள்ளார்.

இவர்­க­ளது கள்­ளக்­காதல் விவ­காரம் இரு­வ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் தெரி­ய­வந்­தது. இரு­வ­ரையும் அவர்­க­ளது குடும்­பத்­தினர் கண்­டித்­துள்­ளனர். இருப்­பினும் இவர்கள் இருவரும் தனி­மையில் அடிக்­கடி சந்­தித்து உல்­லாசம் அனு­ப­வித்து வந்­துள்­ளனர்.

இது குறித்து அறிந்த சந்­தி­ர­சே­கரின் தந்தை அவ­ருக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்தார். அதை­ய­றிந்த ஜோதி தன்­னைத்தான் திரு­மணம் செய்து கொள்ள வேண்­டு­மென சந்­தி­ர­சே­க­ரிடம் பிரச்­சினை செய்­துள்ளார்.

அப்­போது அவரை சமா­தானம் செய்த சந்­தி­ர­சேகர், திரு­மணம் முடிந்­தாலும் உன்­னு­டன்தான் இருப்பேன் என்று கூறி­யுள்ளார்.

அதன்­பி­றகு சந்­தி­ர­சே­க­ருக்கு வேறொரு பெண்­ணுடன் திரு­மணம் நடந்­தது. திரு­மணம் முடிந்த பின்­னரும் சந்­தி­ர­சேகர், ஜோதி­யு­ட­னான கள்­ளக்­கா­தலை தொடர்ந்து வந்­துள்ளார்.

இந்த நிலை­யிலே, ஜோதி­யிடம் இருந்து சந்­தி­ர­சேகர் விலக ஆரம்­பித்­துள்ளார். இதனால் ஜோதி தன்­னு­ட­னான கள்­ளக்­கா­தலை கைவி­டக் ­கூ­டாது என்று பிரச்­சினை செய்­துள்ளார். மேலும் அடிக்­கடி பணம் கேட்டு சந்­தி­ர­ சே­கரை தொந்­த­ரவு செய்­துள்ளார்.

பணம் தர­வில்லை என்றால் எனக்கு நீ கொடுத்த காதல் கடி­தங்கள், போட்­டோக்கள், பரிசு பொருட்கள், செல்போன் பேச்சு உரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றை உன் குடும்­பத்­தா­ரி­டமும், மனை­வி­யி­டமும் கொடுத்து  விடுவேன் என்று கூறி சந்­தி­ர­சே­கரை ஜோதி மிரட்­டி­யுள்ளார்.

அவ­ரது மிரட்­ட­லுக்கு பயந்து சந்­தி­ர­சேகர், ஜோதிக்கு பணம் கொடுத்து வந்தார். இவ்வா­றாக அவர் இது­வரை 5 இலட் சம் வரையில் பணம் கொடு த்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இந்த நிலையில் ஜோதி மீண்டும் சந்­தி­ர­சே­க­ரிடம்  50,000 பணம் கேட்டு அவ ரை தொந்த­ரவு செய்தார். ஆனால் தன்­னிடம் பணம் இல்லை என்றும், தன்னை தொந்­த­ரவு செய்­யாமல் நிம்­ம­தி­யாக வாழ விடு­மாறும் சந்­தி­ர­சேகர், ஜோதி­யிடம் கூறி­யுள்ளார்.

இந்­நி­லை­யி­லேயே தொடர்ந்தும் மிரட்­டி­யுள்ளார். இதனால் ஆத்­திரமடைந்த சந்திரசேகர் சம்­ப­வத்­தன்று ஜோதியை செல்­போனில் தொடர்பு கொண்டு தன்­னுடன் வெளியே வரு­மாறும், அங்கு வைத்து பணம் தரு­கிறேன் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் ஜோதியும் சந்­தி­ர­சே­க­ருடன்  மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ளார்.

அங்கு  இரு­வரும் உல்­லாசம் அனு­ப­வித்த பின்னர், சந்­தி­ர­சே­க­ரிடம், ஜோதி பணத்தை கேட்டு தக­ராறு செய்­துள்ளார். இதில் ஆத்­திரமடைந்த சந்­தி­ர­சேகர், ஜோதியை தாக்கியுள்ளார்.

மேலும் தான் மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியால் ஜோதியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் பெரிய கல் ஒன்றை எடுத்து ஜோதியின் முகத்தில் போட்டுள்ளார்.

பின்னர் சட­லத்தை அங்­கேயே போட்­டு­விட்டு சந்­தி­ர­சேகர் மோட்டார் சைக்­கிளில் தப்பிச் சென்­று­ள்ளார். இதற்­கி­டையே வெளியே சென்ற தன்­னு­டைய மனைவி ஜோதி நீண்ட நேர­மா­கியும் வீடு திரும்­பா­ததால் கணவர் குரு­சாமி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் ஜோதி, அவ­ரு­டைய கள்­ளக்­கா­தலன் சந்­தி­ர­சே­க­ருடன் மோட்டார் சைக்­கிளில் சென்­றது  தெரியவந்தது. இதனையடுத்து குருசாமி தாளவாடி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு  செய்துள்­ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து பொலிஸார் சந்­தி­ர­கே­கரை நேற்று முன்­தி­னம் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments

comments, Login your facebook to comment