காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர் ஒருவரை, கன்னட இளைஞர்கள் சிலர் கண்மூடித்தனமாக அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து, கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக தமிழ முதல்வர் உருவ படத்தை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ் தொலைகாட்சிகள் அனைத்தும் முடக்கிவிடப்பட்டன.

மேலும் கன்னட நடிகை ஒருவர் தமக்கே தண்ணீர் இல்லாத போது, நாம் ஏன் பிறருக்கு தண்ணீர் தர வேண்டும் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட திரையுலகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை பெங்களூரில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞன் முகநூலில் பதிவிட்டதாக கூறி, கன்னட இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments

comments, Login your facebook to comment