காவிரி விவகாரத்தில் தமிழனை தாக்கிய கர்நாடக மக்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவன் அதிரடி சவால் விடுத்துள்ளார்.

சமீபத்தில் சிலர் அங்குள்ள தமிழரை அடித்து உதைத்து, மண்டியிட வைத்து கன்னடம் வாழ்க என்று சொல்ல வைத்துள்ளனர், இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர், கர்நாடகா மக்களுக்கு சவால் விடுத்து சமூக வலைத்தள்ளத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அந்த இளைஞன் கூறுகையில், பத்து பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் நீங்கள் எல்லாம் ஆண்களா? முடிந்தால் என்னுடன் ஒத்தைக்கு ஒத்தை மோதுங்கள்.

அதில், நான் தோற்றுவிட்டால் பெங்களூர் முழுவதும் நிர்வாணமாக ஓடுகிறேன். நீங்கள் தோற்றுவிட்டால் என்ன செய்வீர்கள்? உலகத்திற்கே வீரம் என்றால் என்னவென்று சொல்லி கொடுத்தவன் தமிழன்டா.

உங்களுக்கு விருப்பம் உள்ள இடத்திற்கே நான் வந்து சண்டை போடுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment