625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)டெல்லியில் அதிக மது போதையில் காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி வடக்கு ரோகினி பகுதியில் நேற்று இரவு 1.45 மணியளவில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார்களை அந்த வழியாக அதிக மது போதையில் வந்த இரு இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் இருவரும் ரோகினி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோகினி பொலிஸ் நிலைய உயரதிகாரி மது போதையில் இருந்த இருவரையும் கைது செய்து தாக்கப்பட்ட பொலிஸ்காரர்களை மீட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இளைஞர்கள் இருவரையும் விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் லலித் (29), சச்சின் (23) என்பதும், இருவரும் சகோதரர்கள் நில விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், குடிபோதையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கான்ஸ்டபிள்களை அவர்கள் தாக்கியுள்ளனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட மூன்று பிரிவுகளில் அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment