625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)காதல் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரது தந்தை, காதலுக்கு உதவிய இரண்டு பெண்களை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வடக்கு உப்பூரை சேர்ந்தவர் நடராஜன்.

இவரது மகள் ரம்யா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காதல் விவகாரம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை கண்ட ரம்யாவின் குடும்பத்தார் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், தனது மகள் காதலிப்பதற்கு செல்போன் கொடுத்து உதவிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண் மாதவி மற்றும் அவரது பாட்டி சுப்பு லெட்சுமி ஆகியோரை நடராஜன் அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த 2 பெண்களும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நடராஜனை தேடிவருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment