625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறி வந்த தமிழச்சி, ராம்குமார் தற்கொலை செய்தி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவேற்றியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“சுவாதி படுகொலை மற்றும் ராம்குமார் படுகொலை என்பவற்றுக்கு சிபிஐ விசாரணை வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ராம்குமார் உடலை பரிசோதித்து விட்டு இராயபேட்டை அரசு மருத்துவர் அளித்த மருத்துவச் சான்றிதழில், “ராம்குமாரின் இடது கண்ணில் காயம், இடது மார்பில் காயம், இடது கையில் காயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காயத்தின் அடையாளம் மற்றவரின் தாக்குதல் காரணமாகவே ஏற்படுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை’ என்பதற்கு அரசு மருத்துவர் சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும்.” என்று தமிழச்சிபதிவிட்டுள்ளார்.

 

Comments

comments, Login your facebook to comment