625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குகையில் டயர் வெடித்து கோளாறு ஏற்பட்ட போது விமானி திறமையாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் விமானத்தில் பயணித்த நான்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த் அன் கோ வசந்தகுமார் உள்ளிட்ட 72 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உட்பட 72 பேர் பயணித்துள்ளனர். விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கத் தொடங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் உள்ள டயர் திடீரென வெடித்துள்ளது.

இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி விடுமோ என்று பயணிகள் பீதியடைந்துள்ளனர். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து விமானத்தில் இருந்த 72 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment