டெல்லியில் இன்று இளம்பெண் ஒருவரை அவரது முன்னாள் காதலன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் புராபகுதியை சேர்ந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சுரேந்திர சிங்(34) என்பவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை சுரேந்திர சிங் பொது மக்கள் பலருக்கு மத்தியில் அப்பெண்ணை கத்தியால் 22 முறை தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். கொலை சம்பவத்திற்கு பின்னர் பொதுமக்கள் அனைவரும் அவரை விரட்டி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக இப்பெண்னை சுரேந்திர சிங் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும், இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு இரு வீட்டாரிடமும் சுமூகமாக பேச்சு வார்த்தை செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

ஆனால் இன்று காலை அப்பெண்னை இவன் பின்தொடர்ந்து, மடக்கி பிடித்து சரமாரியாக கண்மூடித்தனமாக குத்தியுள்ளான்.

இதில் அப்பெண்ணுக்கு 22 முறை கத்தி குத்து விழுந்துள்ளது என்றும், சுரேந்திர சிங் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கூறினர்.

மேலும் பொலிசார் வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment