625.368.560.350.160.300.053.800.560.160.90கான்பூர் அருகே கணவன் மனைவி தகராறில், கணவனை மனைவி கடித்தே கொன்ற வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் அருகே பாகாதிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஃபதேபூரைச் சேர்ந்த கோமதி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கோமதி தேவி தனது தாயை காண வேண்டும் என நீண்ட நாட்களாக அரவிந்திடம் கூறிவந்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கோமதி தேவி அரவிந்தை சரமாரியாக கடித்து துப்பிவிட்டு தனது குழந்தைகளை தூக்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், பலத்த கயமடைந்த அரவிந்தை அவரது தாய் குலாபி தேவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், கோமதி கடித்ததில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மருத்துவமனையில் அரவிந்த் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அரவிந்தின் தாய் குலாபி தேவி கொடுத்த புகாரின் பேரில் கோமதி தேவி மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment