கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தும்கூர் மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தும்கூரில் பள்ளியில் படித்து வரும் சிறுமியை,அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த சிறுமியின் சகோதரன்,பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நபரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடந்துள்ளார்.

14370391_1811476819086217_5690636679850038352_n 14446176_1811476805752885_1957838218580426802_n 14457517_1811476862419546_4056699709044121570_n

Comments

comments, Login your facebook to comment