625.368.560.350.160.300.053.800.560.160.90சென்னையில் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவர்களின் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காதல் மன்னனை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த கன்யா என்ற இளம்பெண்ணின் தாயார் கடந்த 25 ஆம் திகதி இரவு சிந்தாதிரிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் தனது மகளை நீண்ட நாட்களாக காதலிப்பதாக பின் தொடர்ந்து வந்துள்ளான்.

ஆனால் என் மகள் அவரது காதலை ஏற்க மறுத்துள்ளதால் அந்த இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் என் மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்ப்பிங்) வெளியிட்டுள்ளார்.

இதைத் தவிர, ஏராளமான கல்லூரி பெண்களை காதலிப்பதாக கூறி உல்லாச லீலைகளில் ஈடுபட்டு ஏமாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

விசாரணை நடத்தியதில் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சாமுவேலை கைது செய்யும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment