625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)உத்தர பிரதேசத்தில் இளம் பெண்ணை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வந்த சகோதரனை அந்த கும்பல் நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள சாஃப்ரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வெளியே கடந்த வியாழனன்று ஒரு கும்பல் மது அருந்திவிட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கெட்ட வார்த்தையால் திட்டியும் வசைபாடியும் மது அருந்தி வந்துள்ளனர். இந்த களேபரத்தினால் சங்கடமடைந்த குறிப்பிட்ட வீட்டார் அந்த கும்பலிடம் சென்று வேறு பகுதிக்கு சென்று மது அருந்தும்படி அவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, மட்டுமின்றி இவர்களை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனிடையே இளைஞன் சூரஜ் காஷ்யப் இந்த பிரச்னை தொடர்பாக அவர்களிடம் பேசியுள்ளார்.

ஆனால் அந்த கும்பல் திடீரென்று இவர்களது வீட்டுக்குள் புகுந்து சூரஜின் இளைய சகோதரியை தாக்கியுள்ளனர். இதில் ஒருவன் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

இச்சம்பவத்தை கண்ணுற்ற சூரஜ் அவர்களிடம் முடியும் மட்டும் போராடி தனது சகோதரியை காப்பாற்றியுள்ளான். இதனிடையே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அந்த வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அடுத்த நாள் சூரஜ் வேலை நிமித்தம் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளியே காத்திருந்த அந்த கும்பல் இவரை சரமாரியாக தாக்கி, கொண்டு வந்த மண்ணெண்ணெய் மொத்தமும் சூரஜ் மீது கொட்டி நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

உடம்பெக்கும் தீ பற்றி எரிந்த அந்த இளைஞனின் அலறல் கேட்டு கூடிய கூட்டம் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது 50 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றி வருகிறார் அந்த 17 வயது இளைஞன். இதனிடையே தலைமறைவான அந்த கொலைகார கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment