625.0.560.350.160.300.053.800.668.160.90ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் குழந்தைப் பருவ நண்பர் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குகத்பல்லி உள்ள Moosapet பகுதியிலே இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு நண்பர்களும் பயணித்த பைக் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், மென்பொருள் பொறியாளர் ஹரிகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பைக் ஓட்டி வந்த ரமேஷ் உயிர்பிழைத்துள்ளார்.

நண்பன் இறந்த சோகத்தில் ரமேஷ் அருகிலுள்ள பாரத் நகருக்கு சென்று தற்கொலை செய்துள்ளார்.

ரமேஷின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுத்ததாக பொலிசார் தெரவித்துள்ளனர். மேலும், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

20 வயதுடைய இளைஞர்கள் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் குகத்பல்லியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

இத்துயர சம்பவத்தினால் இரு குடும்பங்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment