625.368.560.350.160.300.053.800.560.160.90பாகுபலி படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணா ஓடும் நீரில் குழந்தையை தலைக்கு மேல் வைத்திருந்தது போல், ஆந்திரா மாநிலத்தில் தந்தை ஒருவர் கழுத்தளவு நீரில் நோய்வாய்ப்பட்ட பெண் குழந்தையை சுமந்து சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வு புகைப்படமாக வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 வயதான Pangi Satti Babu என்பவரே சிகிச்சைக்காக தனது 6 மாத பெண் குழந்தையை இப்படி சுமந்து சென்றுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்து வருவதால் Pangi Satti Babu வசிக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த Pangi Satti Babuவின் 6 மாத குழந்தைக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் சுமார் 100 மீட்டர் தூரம் கழுத்தளவு நீரில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை சுமந்து சென்றுள்ளார். பின்னர், 5 கி.மீ நிலத்தில் நடந்து சென்று அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்துள்ளார்.

தற்போது மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் குழந்தையின் உடல் நலம் தேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிகழ்வை புகைப்படத்துடன் ஆர்வலர் Srinivas Ganjivarapu என்பவர் பேஸ்புக் பக்கத்தில் வௌயிட்டுள்ளார். தற்போது, குறித்த புகைப்படம் பாகுபலி படத்துடன் ஒப்பிடபட்டு வைரலாகியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment