625.0.560.350.160.300.053.800.668.160.90தமிழகத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கோபி(26), இவரின் மனைவி லலிதா(18).

லலிதா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து பின்னர் கோபியை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லாரி ஓட்டுனரான கோபிக்கு திருப்பூரில் வேலை கிடைக்க மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவி லலிதாவுடன் அங்கு குடியேறியுள்ளார்.

இதனிடையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளால் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கோபிக்கும் லலிதாவுக்கும் இடையில் சண்டை முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபி மனைவி என்றும் பாராமல் லலிதாவின் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

பின்னர் விடயம் வெளியில் தெரிந்தால் பொலிசாரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த நாள் வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கபடாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் இறந்து கிடந்த இருவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment