625.0.560.350.160.300.053.800.668.160.90இந்தியாவின் ஆந்திர மாநிலம் “கடப்பா மாவட்டம் புலுகுண்டா” கிராமத்தில் கண்ணாமூச்சி விளையாடிய போது சுவரின் நடுவில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேர போராட்டதின் பின் மீட்டுள்ளனர்.

குறித்த “பரூக்” என்ற சிறுவன் (6 வயது) பள்ளி விடுமுறையையொட்டி சிந்தாகுண்டா வாலைபள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று இருந்தான்.

அந்நேரம் சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடில் இருந்த பரூக் அங்குள்ள இரண்டு வீட்டின் சுவர் நடுவில் ஒளிந்து கொள்ள சென்றுள்ளான்.

சிறிய இடைவெளி என்பதால் சுவரில் பரூக் நுழைந்தபோது அவனது உடல் சுவர் இடுக்கில் சிக்கி கொண்ட காரணத்தால் அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் கூச்சல் போட்டும் யாருக்கும் கேட்கவில்லை.

3 மணி நேரத்துக்கு பிறகும் பரூக்கை காணாத உறவினர்கள் அவனைதேடிய போதுதான் அவன் சுவரின் நடுவில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்பு படைக்கு அனுப்பபட்ட தகவலை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் சுவரை “டில்லர் கருவி” மூலம் உடைத்து 4 மணி நேரம் போராட்டத்தின் பின் மீட்டுள்ளனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment