betticaloதமிழ்நாட்டில் இளைஞர் ஒருவரை யாரோ கொலை செய்து விட்டு சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோனமங்கலம் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் – சாந்தி தம்பதிகளுக்கு கார்த்திகேயன் மற்றும் சுந்தரமூர்த்தி (24) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் சுந்தரமூர்த்தி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் வேலை நிமித்தமாக அடிக்கடி வேறு ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியில் சென்ற சுந்தரமூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. வேலை விடயமாக வெளியூர் போனால் சில நாட்களில் திரும்பி வரும் அவர் பல நாட்களாக வராமல் இருந்துள்ளார்.

இதனால் கவலையடைந்த அவர் குடும்பத்தார் அவருக்கு போன் செய்தனர். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது.

அடுத்து என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த அவர்களுக்கு இடியாக ஒரு செய்தி வந்தது. சேந்தமங்கலம் காட்டு பகுதியில் சாக்கு மூட்டையில் ரத்த கரையுடன் ஏதோ கிடப்பதாக அந்த கிராமத்தில் தகவல் பரவியது.

தகவலறிந்த பொலிசார் அங்கு சென்று அய்வு செய்த போது அதில் அழுகிய நிலையில் ஒரு சடலம் காணப்பட்டது. பின்னர் அது காணாமல் போன சுந்தரமூர்த்தியின் சடலம் என அறியப்பட்டது.

சுந்தரமூர்த்தி அடித்து கொல்லப்பட்டதை உறுதி செய்த பொலிசார் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments

comments, Login your facebook to comment