625.0.560.350.160.300.053.800.668.160.90இந்தியாவில் மத சம்பிரதாயத்தின் வழக்கப்படி தொடர்ந்து 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜைன மத வழக்கப்படி, இவ்வுலகில் வாழ விரும்பாத முதியோர்கள் அன்னம், தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் ’சவ்மாஸா’ அல்லது ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு.

இதற்கு சட்டம் அனுமதி அளிக்காத நிலையில், இதன்படி உலக வாழ்வை துறக்க 13 வயது சிறுமி முடிவு செய்தார்.

அதன்படி, திருமண பெண் போல அலங்காரம் செய்து கொண்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

68 நாள் உண்ணாவிரதத்தை தெலுங்கானா அமைச்சர் பத்மா ராப் கவுட் முன்னிலையில் முடித்துக் கொண்டார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

’பால தபஸ்வி’ (குழந்தை தவயோகி) என்ற பட்டத்துடன் மரணம் அடைந்த ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தந்தையின் நகைக்கடையை பிரபலப்படுத்தவே ஆராதனா இந்த விஷப்பரீட்சையீல் ஈடுபட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகிவரும் நிலையில், சிறுமியின் மரணம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment