625.0.560.350.160.300.053.800.668.160.90பிரிந்து போன காதலனை பழிவாங்க காதலன் வீட்டில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி செய்த காதலியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்தவர் ஜெய் இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தனியாக பிரிந்து வந்து ஆர்த்தி (35) என்ற பெண்ணுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் திடீரென்று ஜெய் ஆர்த்தியை உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழப்போவதாக கூறி சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி தன்னுடைய முன்னாள் காதலனான பிரதீப் என்பவரிடம் இது பற்றி கூறியுள்ளார். அதன் பின்னர் இருவரும் ஜெய்யை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பிரதீப் தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியோடு 3 வெடி குண்டுகள் வாங்கியுள்ளார். அந்த 3 வெடி குண்டுகளையும் சாம்பாத்தில் உள்ள ஜெய் வீட்டைச் சுற்றி மறைமுகமாக வைத்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மறைமுகமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 குண்டுகளையும் கண்டுபிடித்து செயலிழக்க செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு காரணமான ஆர்த்தி மற்றும் பிரதீப்பை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment