625.500.560.350.160.300.053.800.900.160.90கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் நடத்திய கல்லெறி தாக்குதலிலேயே இந்த காயம் ஏற்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 35 வயதான ரோயப்பன் என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை பயமுறுத்தும் வகையில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட பின்னர் கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தமது மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படையினர் நாசப்படுத்த முயற்சித்தபோதும் குறித்த கடற்பிரதேசத்தில் இருந்து இந்திய கடல் பகுதிக்கு தாம் வேகமாக நகர்ந்துவிட்டதாக பாம்பன் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment