1461818869-8896நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத மனைவியை அவரது கணவனே விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, போதகாப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அப்பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா(20) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், திருமணம் செய்து 2 வருடம் ஆகியும் குழந்தை இல்லையே என்ற மனக்கவலையால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை பிரியா வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, பிரியாவின் தாய் ரங்கம்மாள் நாமகிரிப்பேட்டை பொலிஸ் நிலையத்தில், தனது மகளை ராஜேஷ் தான் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

புகாரைப்பெற்ற பொலிசார் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment