1455089127-8662தமிழகத்தில் கணவர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை தீ வைத்து எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலைச்செல்வி, நாகராஜ் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நாகராஜிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

குறித்த விடயம் கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வர, அவர்கள் நாகராஜை கண்டித்துள்ளனர். இருப்பினும் நாகராஜ் அந்த உறவை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட கடும் கோபமான நாகராஜ், கலைச்செல்வியை கடுமையாக தாக்கியதோடு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

நாகராஜ் வீட்டு மாடியில் இருந்து கருகிய புகை வந்தை கண்ட அக்கம் பக்கத்தினர் மாடிக்கு விரைந்து பார்த்து போது கலைச்செல்வி கருகிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளனர்.

உடனே அவர்கள் பொலிஸிக்கு தகவல் கொடுக்க பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைச்செல்வியின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நாகராஜ், அவரது தாயார் வீரம்மாள், தந்தை ராமர் ஆகிய 3 பேரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த கலைச்செல்வி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment