Cheer_B_Liveday_kjegikதிருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு மாணவர்கள் 10 பேர் காலையில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் திருப்பூரில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment