625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)‘ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வரும்போது பட்டாசுகள் தயாரிக்கும் இடமான சிவகாசியில் மனிதர்களின் இரத்தம் பூமியில் சிந்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் என்ன விதிவிலக்கா? இந்த வருடமும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மின் லாரியில் பட்டாசு ஏற்றப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 20 பேர் பட்டாசு கிடங்கில் சிக்கினர்.

மேலும், பட்டாசு கிடங்கின் அருகில் உள்ள ஸ்கேன் சென்டரில் நோயாளிகளும் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பெண்கள் உள்பட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வளர்மதி, பாஸ்கர், ராஜா, சொர்ணகுமாரி, தேவி, பத்மாவதி, சுப்புலட்சுமி ஆகியோ உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 8 பேரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் ஆவர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, பட்டாசு கடை உரிமையாளர் செண்பகராமன், கடைக்கு உரிமம் பெற்றிருந்த ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1) 625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment