1461818869-8896ஹைதராபாத்தில் தனக்கு தானே மயக்க ஊசி போட்டுக் கொண்டு மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவ பல்கலைகழகத்தில் முதுகலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார் 27 வயதான ஸ்ரவனி என்ற அந்த இளம்பெண்.

நேற்று இரவு 7 மணி அளவில் ஸ்ரவனிக்கு அவருடைய அம்மா தொலைப்பேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் தொலைப்பேசியை எடுக்காததால், அவருடைய அறைத் தோழிக்கு ஸ்ரவனியின் அம்மா போன் செய்து ஸ்ரவனி போனை எடுக்காதது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அறைக்கு திரும்பிய ஸ்ரவனியின் தோழி அறை உள்புறமாக தாளிடப்பட்டதை அறிந்துள்ளார். பின்னர் ஜன்னல் வழியாக பார்க்கும் போது, ஸ்ரவனி அறுவை சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை, ஊசி மூலம் தனது கை நரம்பில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அறையின் கதவை உடைத்து, ஸ்ரவனியை மருத்துவனையில் சேர்த்துள்ளனர். ஆனால் ஸ்ரவனியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஸ்ரவனி காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment