625.0.560.320.500.400.194.800.668.160.90 (3)கேரளாவில் பறவையை காப்பாற்ற போனவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேராள மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் ஜெயின். பறவைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயின் அப்பகுதியில் எந்த ஒரு பறவை அடிபட்டிருந்தாலும் உடனடியாக அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார் அல்லது அவரால் முயன்ற அளவுக்கு சிகிச்சை அளித்தும் பார்ப்பார்.

இந்நிலையில் அப்பகுதியில் கழுகு ஒன்று மரத்தில் சிக்கித் தவிப்பதாக ஜெயினிற்கு தகவல் சென்றுள்ளது. ஜெயின் செல்ல முடியாத காரணத்தினால் தன்னுடைய நண்பரான மணியை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் மணி அங்கு சென்று பார்த்த போது கழுகு இறக்கையில் அடிபட்டு பறக்கமுடியாமல் அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளது. இதனால் உணர்ச்சிவசப் பட்ட குமார் குளத்தைப் பற்றி தெரியாமல், உடனடியாக குளத்தின் உள்ளே குதித்துள்ளார். ஆனால் அவர் குதித்த பகுதியே சேறு, சகதி என்பதால் அதில் மாட்டிகொண்ட அவர் அதில் இருந்து அவரால் மீளமுடியவில்லை.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் கழுகு பத்திரமாக மீட்கப்பட்டது. உயிரிழந்த குமார் இதுவரை 100க்கும் மேற்பட்ட பறவைகளை காப்பாற்றியுள்ளார் எனவும் இதற்காக அவர் பணம் ஏதும் பெற்றுக்கொண்டதில்லை எனவும் முகேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.625.0.560.320.500.400.194.800.668.160.90 (3)

Comments

comments, Login your facebook to comment