08-1452233515-videoமும்பையில் வாடைக்கு வீடு பார்க்க சென்ற இளம்பெண் ஒருவர் தனது கணவன் கண்முன்னே 8 பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 28 வயதான இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் மும்பை ஜோகேஷ்வரியில் உள்ள குடிசைப் பகுதியில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தனர்.

இவர்களை மற்றொரு பெண் ஒருவர் வீடு பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆனதால் அந்த பெண் தன்னுடைய வீட்டில் தங்குமாறு அவர்களை கூறியுள்ளார். அவர்களும் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளனர்.

அப்போது முரட்டுத் தனமாக வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட ஒரு கும்பல், கணவனை தாக்கிவிட்டு அவர் முன்னிலையே அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியது.

பின்னர் கணவரும், பாதிக்கப்பட்ட அவரது மனைவியும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தனர்.

வழக்குப் பதிவு செய்த பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று குற்றவாளிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இளம் பெண் ஒருவர் தனது கணவர் முன்னிலையிலே 8 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment