1237திருச்சியில் இருப்பில் இருந்த ரத்தத்தை உரிய நேரத்தில் வழங்காததால், பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே நாச்சிக்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் என்பவரது மனைவி கவிதா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த அவருக்கு உடனைடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்காக அதிக ரத்தம் தேவைப்படும் எனவும் உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்யவும் உறவினர்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்தியுருந்தனர்.

இந்த நிலையில் கவிதாவின் உறவினர்கள் பலவாறு முயன்றும் போதிய அளவுக்கு ரத்தம் சேகரிக்க முடியாமல் போனதை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த மருத்துவமனையில் இருப்பில் இருந்த ரத்தம் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனையேற்று மருத்துவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க இவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இருப்பில் இருந்த ரத்தத்தை உரிய நேரத்தில் அளிக்காமல் குறித்த மருத்துவமனை நிர்வாகிகள் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே கவிதாவுக்கு பெண்குழந்தை இறந்த நிலையியே பிறந்துள்ளது. கவிதாவின் உடல்நிலையும் மோசமாக இருந்ததால் அவரும் உயிரிழந்துள்ளார்.

உரிய நேரத்தில் ரத்தம் அளிக்காததால், தாயும், சேயும் இறக்க நேரிட்டதாக கவிதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment