downloadமுன்னாள் காதலியை கரம் பிடிக்க காதலன் காதலியின் கணவனுக்கு தீபாவளி பரிசாக விஷம் கலந்த மதுவை அனுப்பிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுவை குடித்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தின் வேலூர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(35). இவரது மனைவி கவுதமி. சதீஷ்குமாருக்கு தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த தொலைபேசி அழைப்பில், ‘உங்கள் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது. வீட்டு முகவரி கொடுத்தால் பரிசை அனுப்பி வைக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சதீஷ்குமார் முகவரியை கொடுத்துள்ள்ளார். அடுத்த ஓரிரு நாளில் இவரது வீட்டுக்கு பார்சல் ஒன்று வந்திருந்தது. அதை அவரது அம்மா வாங்கி வைத்திருந்தார்.

சதீஷ்குமார் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் மது பாட்டில் ஒன்று இருந்தது. இதையடுத்து தீபாவளி அன்று சதீஷ்குமார் தனது நண்பருடன் சேர்ந்து அந்த மதுவை குடித்துள்ளார்.

மதுவை குடித்த சில நிமிடங்களில் இருவரும் ரத்த வாந்தி எடுத்தனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மதுவில் மோனோ ப்ரோட்டோ பாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது

மதுபாட்டிலில் ஊசி மூலம் இந்த விஷம் உள்செலுத்தப்பட்டதும் தெரியவந்தது.

பார்சலில் உள்ள முகவரியை கொண்டு விசாரித்த போது அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சதீஷ்குமாரின் மனைவி கவுதமிக்கு தொடர்ந்து அழைப்பு வந்ததால் சந்தேகமடைந்த பொலிசார்,

அவரது மனைவியின் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது விநாயகமூர்த்தி என்பவர் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பேசி வருவது தெரியவந்தது. விநாயகமூர்த்தி கவுதமியின் முன்னாள் காதலன் என்றும், கவுதமியை கரம் பிடிப்பதற்காக அவரது கணவரை கொல்ல விஷ மது பாட்டிலை அனுப்பியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளானர்.

Comments

comments, Login your facebook to comment