625.0.560.320.500.400.194.800.668.160.90இந்தியாவில் பிறந்த பச்சிளங்குழந்தை ஒன்றை தெரு நாய்கள் பாதுகாத்து உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பதர்டி பாரா என்ற பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அல்ஹாஸ் சவுத்ரி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது வீட்டின் அருகே இருக்கும் புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே அங்கு சென்று பார்த்த போது பச்சிளங் குழந்தையைச் சுற்றி நான்கு தெரு நாய்கள் உட்கார்ந்து கொண்டு காகங்களை விரட்டி கொண்டிருந்துள்ளது.

இதைக்கண்ட அல்ஹாஸ் சவுத்ரி அதிர்ச்சி அடைந்து உடனடியாக சென்று அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அங்கு வந்த அப்பகுதியினர் பெண் குழந்தையை எடுத்து சென்று பால் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர் பொலிசில் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் அக்குழந்தையை சேர்த்துள்ளனர்.625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment